Categories
மாநில செய்திகள்

நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்…. ஆளுநர் என்.ஆர்.ரவி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, உருமாறிய கொரோனா வைரசின் சவால்களை எதிர்கொள்ள அரசு முழுமையாக தயார் நிலையில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவு மற்றும் நீர்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களுக்கு நல்லுறவு இருக்கும் அதே நேரத்தில் நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |