Categories
உலக செய்திகள்

“நமது சிறப்பு நண்பரிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசு”… இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ட்விட் பதிவு…!!!!!!!

ஜப்பான் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இந்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ் நாத் சிங் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி கடந்த திங்கட்கிழமை மங்கோலியா சென்று அடைந்த அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின் அந்த நாட்டு அதிபர் உக்நாகின் குருல்சுக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது சிங்குக்கு வெள்ளை குதிரை ஒன்றை மங்கோலியா அதிபர் பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை குதிரையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மங்கோலியாவில் நமது சிறப்பு நண்பரிடம் இருந்து ஒரு சிறப்பான பரிசு இந்த வசீகரிக்கும் அழகிற்கு தேஜஸ் என நான் பெயர் சூட்டி இருக்கிறேன்.

அதிபர் குருல் சுக்கிற்கு நன்றி. மங்கோலியாவிற்கு நன்றி எனக் கூறியுள்ளார். மேலும் அந்த நாட்டு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பாதுகாப்பு மந்திரி என்னும் பெருமையை ரத்னா சிங் பெற்று இருக்கின்றார். ஏழு வருடங்களுக்கு முன் மங்கோலியா சென்ற பிரதமர் மோடிக்கு இதே போல சிறப்பு பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் வருடம் மங்கோலியாவிற்கு பிரதமர் மோடி சென்றபோது அப்போது மங்கோலிய பிரதமராக இருந்த சிமெண்ட் சாய் கான்பிலெக் பிரவுன் நிறத்திலான பந்தய குதிரை ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்துள்ளார்.

Categories

Tech |