Categories
உலக செய்திகள்

“நமது நட்புறவை ஆழப்படுத்துவோம்”…. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேல்…. வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்….!!

இஸ்ரேல் நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது அவர் கூறியதாவது “இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாக, நமது இஸ்ரேல் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வருடம் நமது தூதரக உறவுகளின் 30வது வருடம் நிறைவைக் கொண்டாடுகிறோம். எனவே இந்த அத்தியாயம் புதியதாக இருந்தாலும் இரு நாட்டு உறவுகளின் வரலாறு மிகவும் பழமையானது என்றும் வரும் ஆண்டுகளில் நமது நட்புறவை மேலும் ஆழப்படுத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |