புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த முடி சூட்டு விழாவின் மூலம் பிரித்தானியாவின் மதிப்பு மற்றும் மரியாதையை உலகிற்கு நாம் காட்ட முடியும். ஆனால் தற்போது ஒரு மணி நேரத்திற்குள் விழா முடிக்கப்படும் என புதிய மன்னர் கூறியுள்ளார். இந்த விழாவில் வழக்கமாக 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது அவர்களுக்கு பதிலாக 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடம்பர அம்சங்கள் எதுவும் இன்றி புதுமையான முறையில் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஏனென்றால் மக்கள் பணவீக்கத்தினால் அவதிக்குள்ளாகிருக்கும் நிலையில் வீண் ஆடம்பரம் தேவையில்லை என மன்னர் கூறியுள்ளார். ஆனால் கடந்த 1953-ஆம் ஆண்டு ராணியார் எலிசபெத் முடி சூடு போது ஆடம்பரமாக நடைபெற்றது போல் தற்போதும் நடைபெற வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். அதை நாம் கொண்டாடாமல் விடுவது முறையாக இருக்காது. மேலும் இதில் விலைவாசி உயர்வை தனித்தால் கண்டிப்பாக பின் விளைவுகள் ஏற்படும். இதனையடுத்து விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார விவகாரம் தொடர்பில் மன்னர் கவலைப்பட தேவையில்லை. மன்னரின் முடி சூட்டு விழாவை ஆடம்பரமாக முன்னெடுப்பது மக்களின் கடமை என கூறியுள்ளனர்.