தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுகவுடன் தேமுதிக ஆலோசிக்க இருந்த நிலையில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று தேமுதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு தரவில்லை என அமைச்சர் தங்கமணி உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்துவிட்டு தேமுதிக நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், நமது முதல்வர், நமது கொடி, நமது சின்னம் என விஜயகாந்த், முரசு சின்னத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதிமுகவுடன் முதலில் நடந்த பேச்சுவார்த்தையில் 15 சீட் வரை மட்டுமே வழங்க இருந்ததாக தெரிகிறது. தற்போது இந்த பதிவால் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.