Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நம்பர் பிளேட் இப்படிதான் இருக்கணும்…. விதிமுறைகளை வெளியிட்ட காவல்துறை….!!

வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் ,எழுத்துக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் 

சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை நகரில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளும் , எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைபடி  இல்லை.

அனைத்து தனியார் வாகனங்களிலும் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வர்த்தக வாகனங்களில் மஞ்சள் நிற பிளேட் ,  எழுத்து கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் .

70 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்ட  இரு சக்கர வாகனங்களில் முன் எழுத்துக்கள் 15 மி.மீ உயரத்திலும், 2.5 மி.மீ இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் அனைத்திலும் பின் எழுத்துக்களின் உயரம் 35 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5 மி.மீ எழுதப்பட்டிருக்க வேண்டும்.

500 சி.சி.க்கு எஞ்சின் திறன் கொண்ட மூன்று சக்கர வாகனங்களில் முன்பின் எழுத்துக்கள் 35 மி.மீ உயரத்திலும் , 7 மி.மீ தடிமன் மற்றும் 5 மி.மீ இடைவெளியிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

500 சி.சி.க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்ட மூன்று சக்கர வாகனங்களில் முன் பின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்து 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ தடிமன், இடைவெளி 5 மி.மீ அமைய வேண்டும்.

இதர மோட்டார் வாகனங்களுக்கு முன்பின் நம்பர் பிளேட்டுகளில் எழுத்துக்கள் 65 மி.மீ உயரத்திலும், தடிமன்     10 மி.மீ,  இடைவெளி 10 மி.மீ இருக்க வேண்டும்.

பின்னர் 2019 ஏப்ரல் 1 தேதிக்கு பின் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |