Categories
தேசிய செய்திகள்

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த எம்பியின் கார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஓவைசி நேற்று சோலாப்பூர் நகருக்கு வந்தார். அவர் ஓய்வு எடுப்பதற்காக சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்டுள்ள எம்பியின் கார் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தாங்கிதி பார்த்தார்.

இதனையடுத்து எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் அறிந்த அசாதுதீன் ஒவைசியின் ஆதரவாளர்கள் அங்கு வந்ததால் பரபரப்பு உருவானது. இதனால் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். ஆனால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.பி.யின் காருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்.

இதனால் வேறு வழியின்றி எம்.பி.யின் கார் டிரைவர் ரூ.200 அவதாரம் செலுத்தினார். எனவே எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தாங்கிதியை பாராட்டி சோலப்பூர் நகர் போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5,000 பரிசு வழங்கினார்.

Categories

Tech |