ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர் ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. என்னுடைய சிறந்த நண்பரிடம் உதவி கேட்டுக்கொண்டேன். எனக்கு உதவியாக இருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆஷ்லே பார்டி 2019-ல் பிரெங்ச் ஓபனையும், 2021-ல் விம்பிள்டனையும், 2022-ல் ஆஸ்திரேலிய ஓபன் என மூன்று முறை பட்டம் வென்றுள்ளார்.