சீரியல் நடிகை பரீனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் வெண்பா என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் என்பதால் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அன்னைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை பரீனா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா உங்கள் அம்மா? நம்பவே முடியல என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.