Categories
உலக செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு….பிரதமரின் தொடர் அறிவுறுத்தல்…!!!

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற கோரி, தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரின் ஆட்சியை கலைக்க மொத்தம் 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவானது எதிர்க்கட்சிக்கு தேவைப்பட்ட நிலையில், பிரதமருக்கு எதிராகவே, அவரது கட்சி உறுப்பினர்கள் 17 பேர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கலைப்பதற்கான போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .

இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 4) பிரதமரின் மீது வெளிநாட்டு  தலையீடுகளின் விளைவாக கோரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது அரசியல் சாசனம் பிரிவு 5-க்கு எதிரானது என்றும் மேலும் இந்த பிரிவு 5 இன் படி, “அனைவரும் நாட்டின் அரசியலை மதித்து அதனை பின்பற்றுவது அடிப்படை கடமையாகும் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ்ப்படிவது என்பது அவர் எங்கிருந்தாலும் ஒவ்வொரு பாகிஸ்தான் குடிமகனின் தவிர்க்க முடியாத கடமையாகும்”.

இதையடுத்து இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட பின்,PTV செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்து விடுமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த மக்களை தேர்தலுக்கு தயாராகும் படியும் கூறியுள்ளார்.

Categories

Tech |