Categories
கவிதைகள் பல்சுவை

நம்பிக்கை இல்லாத சமயத்தில் இதை கேள்…..!!!!

செல்லும் பாதையில்… செல்ல வேண்டிய பாதை இன்னும் அநேகம் இருக்க… சென்ற பாதையை பற்றிய சிந்தனை ஏன்?

இழப்புகளை எண்ணி வருந்தாதே!! உயிரைத் தவிர எதை இழந்தாலும் அதை திரும்ப அடைய உன்னால் முடியும்..!! மழை என்றதும் ஓடி ஒளியும் காகம் அல்ல நீ ! மழை மேகத்தை தாண்டி பறக்கும் “கழுகு” உன்னை நீ நிரூபிக்கும் வரை உண்மையாய் இரு!! மண்ணிற்குள் மறைந்து இருக்கும் விதையே முளைக்க துவங்கும்!! எந்த சூழலிலும் துவண்டு போகாதே!! நடந்து முடிந்ததை பற்றி எண்ணி பயனில்லை.. இனி நடக்கவிருப்பதை பற்றி சிந்தி!! தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை….தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு எந்த பயனும் இல்லை..!! நீ கடக்கும் பாதையில் சிலர்  தெரியாமல் செய்வார்கள், சிலர் தெரிந்து செய்வார்கள்…

இருவரையும் கடக்க பழக்கு…!! சிலரின் பாராட்டுக்கும் , அன்பிற்கும் ஏங்கும் வரை அடிமையே..!!! வாழ்வில் நலமா? வளமா? என்ற சூழலில்… எப்பொழுதும் நலத்தை தேர்ந்தெடுத்து……!! வளத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்…!! உன் எல்லா செயல்களும் காலத்தால் மறக்கடிக்கப்படும்……! மனம் விரும்புவதை செய் மற்றவைகளை காலம் பார்த்துக் கொள்ளும்… எது நடந்தாலும் அடுத்து என்ன என்று சிந்தி….!!! புலம்புவதாலும், வருந்துவதாலும் சூழல் மாறாது….!! தீவிரமாக உழைத்தால் மட்டுமே அது சாத்தியம்!!! உன்னை தேற்று உழைப்பால் எல்லாவற்றையும் மாற்று….!!

Categories

Tech |