Categories
சென்னை மாநில செய்திகள்

நம்பி ஏமாந்த சந்தியா.. முகத்தை அடித்தே வீங்கவைத்த “ஆணழகன்” … பரபரப்பு சம்பவம்….!!!

பாலவாக்கத்தில் சேர்ந்த சந்தியா மோகன் (31) என்ற பெண், ஜிம் நடத்தி வந்த மணிகண்டனுடன்(29) நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றவர். உடற்பயிற்சி டிப்சில் தொடங்கிய நட்பு நாளடைவில் கட்டில் வரை நீண்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை மணிகண்டன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோக்களை காட்டி சந்தியாவை பலமுறை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். மணிகண்டன் சந்தியாவை அடித்துத் துன்புறுத்த, டார்ச்சரில் அவரது முகமே சிவந்து வீங்கி விட்டது. இதையடுத்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்தியா பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |