Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பி மாணவியை விட்டு சென்ற சித்தி…. நள்ளிரவில் அத்துமீறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர பணிக்கு சென்றதால் மாணவியின் சித்தி அவரை கார்த்திக்கின் அக்கா வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சித்தியிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் சித்தி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எழிலரசி கார்த்திக்கிற்கு 2000 ரூபாய் அபராதமும், 7 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் சமூக நல துறையின் கீழ் இருக்கும் நிதியிலிருந்து மாணவிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |