Categories
தேசிய செய்திகள்

நம்பி வந்த பெண்ணை இப்படியா பண்ணுவீங்க… மதுபானத்தில் போதை மருந்தை கலந்து… கொடுமையின் உச்சம்…!!!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இளம்பெண்ணுக்கு மது கொடுத்து நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகிலுள்ள அந்தோளி என்று பகுதியில் வசித்து வரும் அஜ்நாஸ் மற்றும் அவருடைய நண்பர் பகத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் மற்ற இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். பின்னர் அஜ்நாஸ்க்கும் கொல்லத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை அவர் உடனடியாக புறப்பட்டு கோழிக்கோடு வரும்படி கூறினார். அந்த பெண்ணும் நேற்று காலை கோழிக்கோடு வந்துள்ளார். அவரை அஜ்நாஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் அறைக்குள் அழைத்து சென்று மதுவில் போதை மருந்தை கலந்து கொடுத்து, நான்கு பேரும் அந்தப் பெண்ணை கற்பழித்து உள்ளனர்.

இதில் அந்த பெண்ணின் நிலைமை மோசமானது. இதை அறிந்த மற்ற நண்பர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இந்த இளம் பெண் இறந்து விடுவாளோ என்ற பயத்தில் அஜ்நாஸ் மற்றும் பகத் அந்த இளம்பெண்ணை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இந்த பெண் கற்பழிக்கப் பட்டதை தெரிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருத்துவமனையில் இருந்த இருவரை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |