Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நம்பி வாடகைக்கு கொடுத்தேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாடகைக்கு குடி வந்த நபர் வீட்டு உரிமையாளரின் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் மேல் பகுதியை பாலமுருகன் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடியமர்த்தினார். இந்நிலையில் பொன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 போன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு இருந்த பால முருகனையும் காணவில்லை.

இதுகுறித்து பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை பிடித்து விசாரித்தபோது அவர்தான் தங்க நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |