மும்பையில் தொழில் அதிபரின் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டில் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இதனால் தொழில் அதிபர் தனது குடும்பத்துடன் மற்றொரு குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். மேலும் வீட்டில் ஒரு லாக்கரில் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றுள்ளார். அந்த குடியிருப்பை சீரமைக்கும் பணியை குஜராத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அந்த லாக்கர் சாவியை எடுத்து அந்த லாக்கரில் இருந்து மதிப்பு மிக்க பொருட்களை திருடியது மட்டுமில்லாமல் குஜராத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஒரு குழி தோண்டி அதில் அந்த திருடிய மதிப்பு மிக்க பொருட்களை புதைத்து வைத்துள்ளனர்.
பின்னர் மீண்டும் மும்பைக்கு திரும்பி குடியிருப்பில் எப்பொழுதும் போல வேலைகளை செய்து முடித்துள்ளனர். வீட்டு வேலைகள் முடிந்து திரும்பிய பொழுது வீட்டில் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலைபார்த்த தொழிலாளர்களை அழைத்து விசாரணை செய்தபோது உண்மை அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மறைத்து வைத்திருந்த நகைகளை கைப்பற்றினர்.