சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.5 1/2 லட்சம் ஜவுளிக்கடையில் மோசடி செய்த மேலாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனியில் வடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடை ஒன்றை காரைக்குடி 100 அடி சாலையில் ஆரம்பித்தார். அதற்கு மேட்டுக்கடை பகுதியில் வசித்து வரும் செல்வகணபதி என்பவரை செயலாளராக நியமித்தார். அதன் பின் அவர் சவுதிக்கு சென்றுள்ளார். கொரோனா பரவி வருவதால் உடனடியாக அவரால் திரும்பி வர இயலவில்லை.
இதனால் காரைக்குடிக்கு நான்கு மாதம் கழித்து திரும்பினார். அதன்பின்னர் ஜவுளி கடைக்குச் சென்றார். அங்கு கணக்குகளை பார்த்தபோது குறைபாடு இருப்பது தெரியவந்தது. அப்போது அதில் ரூ. 5 லட்சத்து 47 ஆயிரத்து 207 ஆடிட்டர் மூலம் கணக்குகளை சரிபார்த்த போது குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளராக வேலை பார்த்த செல்வ கணபதியிடம் கேட்க முயற்சி செய்தார். அப்போது அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மோசடி வழக்குப்பதிந்து செல்வகணபதியை வலைவீசி தேடி வருகின்றனர்.