பெரம்பலூரில் வயதான தம்பதி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவில் நடேசன் (87) -செல்லமாள் (71) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்ததும் மூன்று பேர் உள்ளூரிலும், 3 பேர் சென்னையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடேசன், செல்லம்மாள் தம்பதியினர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் யாரும் கவனிக்க வில்லையே என்ற மனவேதனையில் இருந்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்தவர்கள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அதில் நடேசனுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.