தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விக்ரம் மற்றும் பட குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஜி.டி.ஆர் கல்லூரி வளாகம் மற்றும் ஒரு வணிக வளாகத்தில் நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விக்ரம் பேசியதாவது, நம்முடைய சுற்றுப்புற சூழலையும் பூமி தாயையும் இளைய தலை முறையினர் பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஏனெனில் பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைய தலைமுறையினர் மறந்துவிட்டனர். அதன் பிறகு சுற்றுப்புற சூழலை மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். எனவே இளைய தலைமுறையினர் என்னுடைய அன்பான வேண்டுகோளை ஏற்று பூமித்தாயை பாதுகாக்க வேண்டும் என விக்ரம் கூறினார்