Categories
மாநில செய்திகள்

நம்முடைய பணம் தான்…. நமக்கு திருப்பி வருகிறது…. சட்டப்பேரவையில் மீண்டும் வானதி & பி.டி.ஆர்….!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது கிடையாதது. ஆனால் தற்போது முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது ஏற்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “பிரதமரை திரும்பிப் போங்கள் என்று சொன்னாலும் ரூ.2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு தளவாடங்கள் கிடைத்துள்ளன என்று கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நம்முடைய பணம் தான் நமக்கு திருப்பி வருகிறது. கருணை அடிப்படையில் யாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சட்டப்பேரவையில் வானதி சீனிவாசனுக்கும், பி.டி.ஆருக்கும் “ரோஜா ரோஜா தான்” என்ற விவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |