Categories
மாநில செய்திகள்

“நம்மை காக்கும் 48 திட்டம்”… தமிழகத்தில் உயிரிழப்புகள் குறைவு…. அதிரடி காட்டிய அரசு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் அடிப்படையில் “நம்மை காக்கும் 48” சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துக்குள்ளான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |