Categories
அரசியல்

நம்மை தடுக்கும் சக்தி தமிழகத்தில் யாருக்கும் இல்லை – ஓ.பி.எஸ் அதிரடி பேச்சு …!!

தொண்டர்கள் தேர்தல் களத்தில்  எழுச்சியோடு நின்று பணியாற்றினால் நம்முடைய வெற்றியை தடுக்கின்ற சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்கின்ற மாவட்டங்களில் உறுதியாக நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை மாவட்டமாக வெற்றிபெறும் மாவட்டமாக… அனைத்து வேட்பாளர்கள் வெற்றிபெற்று வெற்றி மாவட்டமாக அமையும்.

டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக தான் உருவாக்கினார்கள். ஒரு தொண்டன்  நாட்டினுடைய  முதலமைச்சராக வர முடியாது  மற்ற மாநிலங்களில். ஆனால் இங்கு ஒரு தொண்டன் முதலமைச்சராக வர முடியும். புரட்சித் தலைவர்  தீர்க்கதரிசியாக இருந்து இந்த இயக்கத்தை உருவாக்கினார்.  இன்று நம்மிடம் இந்த இயக்கம் இருக்கிறது.

இங்கே இருக்கின்ற  நாங்கள் எல்லாரும் சட்டமன்ற உறுப்பினராக,  நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சர்களாக இருந்திருக்கின்றோம். சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். தொண்டர்கள்  வேட்பாளர்களாக நிக்கக்கூடிய தேர்தல். இந்த தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது.

அதனால்தான் வேலுமணினுடைய தலைமையில் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்கு அணிவகுத்து நின்று வெற்றி வேட்பாளராக நிறுத்தப்பட்டுருக்கிற 127 ஒன்றிய குழு வேட்பாளர்களையும், 13 மாவட்ட பஞ்சாயத்து குழு வேட்பாளர்களையும் மகத்தான வெற்றி பெற செய்வோம் என்று தேர்தல் களத்தில் தேர்தல் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

தொண்டர்கள் தேர்தலில் எழுந்து நின்று, எழுச்சியோடு களத்தில் நின்று பணியாற்றினால் நம்முடைய வெற்றியை தடுத்து நிறுத்துகின்ற சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை என்ற நிலைதான் கடந்த காலத்தில் இருந்த வரலாறு.

வெற்றி வாய்ப்பை இழந்த அடுத்த வருடம் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி அந்த தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று தான் வரலாறு. நாம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பெறப் போகின்ற வெற்றி… அடுத்து தமிழ்நாடு தழுவிய நடக்கவிருந்த பேரூராட்சி மன்ற தேர்தல், நகராட்சி மன்ற தேர்தல், மாநகராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக  அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Categories

Tech |