Categories
அரசியல்

நம்மை நசுக்குறாங்க…! விஸ்வரூப தரிசனம் காட்டுவோம்… எச்.ராஜா அதிரடி பேச்சு …!!

12கோவில்களுக்கு முன்பு பாஜக அறிவித்துள்ள போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் எச்,ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகத்தில் தரிசனத்துக்கு கோவில்களை திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் 12கோவில்களின் முன்பு 7ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்த்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வீடியோ வெளியிட்ட எச்.ராஜா மஹாபாரதத்தை எடுத்துக்காட்டாக சொல்லி அனைவரையும் அழைத்தார்.

அவர் பேசியது வருமாறு: மஹாபாரதத்தில் 18அத்தியாயம் கண்ணன் கீதை சொல்லுறான் ? என்ன அவசியம் வந்தது கண்ணனுக்கு ? எதிர் அணியை பார்க்கிறான் அர்ஜுன்… விஜயன் விஷனப்பட்டு போய் சொல்றான், பீஷ்ம பிதாமகர் என்னுடைய தாத்தா, துரோணாச்சாரியார் என்னுடைய ஆசிரியர், துரியோதன ஆட்கள் என்னுடைய சகோதரர்கள் இவர்களை கொன்றுவிட்டு எனக்கு ராஜ்ஜியம் தேவையில்லை என்று..

அப்போதுதான் கண்ணன் சொல்கிறான்… நீ தர்மத்தை செய் பலனை எதிர்பார்க்காதே. நமக்கு நம்முடைய செயல்பாட்டின் மீது தான் அதிகாரம் இருக்கிறது. அப்போ அதை சொல்லிக் கொண்டிருக்கும் போதெல்லாம் விஜயனுக்கு சந்தேகம் போகவில்லை, திரும்பி திரும்பி கேட்கிறான். அப்போ எல்லாத்துக்கும் பதில் சொன்ன கண்ணன் கடைசியில் சலித்துப் போய் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறான்.

எங்க மகாபாரத்தில் விஸ்வரூப தரிசனத்திற்கு பிறகு அர்ஜுனனுக்கு சந்தேகம் வந்ததா ? வரவில்லை. இப்போ தமிழ்நாட்டில் ரொம்ப பேர் இந்த 4 எம்.எல்.ஏ எப்படி வந்தது ?  பிஜேபி வருமா ? வராதா ? கால் ஊனுமா ? ஊனாதா ? எத்தனை சந்தேகங்கள். அர்ஜுனனுக்கு இருக்கின்ற மாதிரி சந்தேகங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது.

அது போகணும் என்றால் நம்முடைய விஸ்வரூப தரிசனம்….  12 கோவில்களில் பாரதிய ஜனதா கட்சி இதை அறிவித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சியாக இருக்கலாம், மாநில தலைவர் திரு அண்ணாமலையா இருக்கலாம். ஆனால் இது தமிழகத்தில் இருக்கின்ற 85 சதவிகிதம் பெரும்பான்மை சமுதாயத்தின் உள்ள கிடக்கை.

ஆகவே வாருங்கள் அனைவரும், இது கோவில்களுக்கு முன்பாக நம்முடைய உரிமை…  அது நம்முடைய அடிப்படை உரிமை இல்லையா ? அது நிலைநாட்டப்பட்ட வேண்டும், ஆனால் அது மறுக்கப்படுகிறது. இந்துவுக்கு மட்டும் மறுக்கப்பட்டிருக்கிறது, சுதந்திரம் இந்த நாட்டில் இந்துக்களுக்கு மதச்சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அது தமிழகத்தில் நசுக்கப்படுகிறோம். ஆகவே வாருங்கள் வாருங்கள் என உங்களை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

Categories

Tech |