Categories
சினிமா

“நம்ம அஸ்வினோட ஃபேவரிட் ஹீரோயின் இவர்தானாம் பா!”…. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற தான் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் அஸ்வின். அஸ்வின் மட்டுமன்றி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களான சிவாங்கி, வர்ஷா, பாலா ஆகியோரும் தங்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகலும் குவியத் தொடங்கின. அவ்வாறு இவர் நடித்த படம்தான் என்ன சொல்ல போகிறாய்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடவே பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் மாதத்திற்கு படக்குழு ஒத்தி வைத்துள்ளது. ஏனெனில் பட விழாவின்போது அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து இப்போது வெளியிட்டால் சரிப்பட்டு வராது என படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அஸ்வின் தற்போது சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்பது பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இந்திய அளவில் முன்னணி ஹீரோயினாக விளங்கிவரும் தீபிகா படுகோனே தான் அஸ்வினுக்கு மிகவும் பிடித்த நடிகையாம்.

Categories

Tech |