கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமல்லாமல் எரிபொருள் ஏற்றுமதியையும் தடை செய்துள்ளது. இந்நிலையில் சீனா தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.