Categories
சினிமா தமிழ் சினிமா

‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் செய்த விஜய் ஆண்டனி… இணையத்தில் செம ஹிட் …!!!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி  ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது . இதையடுத்து இவர் நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகிறது. இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மீகா நடிக்கிறார். அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது .

இந்நிலையில் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஹிட் பாடல்களில் ஒன்றான ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடல் ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

 

Categories

Tech |