Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நம்ம ஊரு சூப்பரு திட்டம்”… ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி….!!!!!

செட்டி நாயக்கன்பட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தாலும் அது மக்களிடையே எளிதில் சென்றடைவதில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதற்காக பேரணி, கலை நிகழ்ச்சிகள் என பலவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் ஊராட்சி அலுவலகம், வட்டார வள மையம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட 2,536 அரசு கட்டிடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ள பகுதிகளை கண்டறிந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் மாற்றாக மஞ்சள் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது அதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது எனக் கூறினார்.

Categories

Tech |