தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டுப்புற கலைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலை விழாவை தமிழக அரசு சென்னையில் நடத்தவுள்ளது. இந்த விழாவில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை சிடி (அ) பென் ட்ரைவில் பதிவு செய்யவும். அதனை மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.