Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்…. கொந்தளித்த சின்மயி…. எதுக்கு இவ்வளவு கோபம் தெரியுமா….?

பிரபல பாடகி சின்மயி திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஆண் மற்றும் பெண் என்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதையும் வெளியிடவிடவில்லை என்பதால் அவர் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா? என்று வதந்தி பரவி பலரும் விவாதிக்க தொடங்கினார்.

அதன் பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சின்மையி தன்னுடைய இணைய பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். இந்த நிலையில் இவர்களுடைய இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி எனது கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் என்னவென்றால் ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டாதால்தான் புகைப்படத்தை வெளியிடவில்லை.

பலாத்கார ஆதரவாளர், என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று என்னிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான் ரத்தத்திலேயே ஊறுனது. வளர்ப்பும் அப்படி என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |