ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக ஆட்கொண்டு வருகிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின் நாயகனாக உயர்ந்த ரஜினியின் திரைப்பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ரஜினியின் படங்கள் வெளிவரும் நாட்களை பண்டிகையாக கொண்டாடும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றார்கள். இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி மற்றும் நெல்சன் இணையும் தலைவர் 169 என அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களாக ரஜினி அவ்வப்போது தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மிக முக்கியமான விழாக்களில் மட்டுமே ரஜினி தற்போது கலந்து கொள்கிறார்.
தலைவர் Stage performance@rajinikanth pic.twitter.com/FBnd48CESE
— 🤘🤘Senthil 🤘🤘🤘 (@Senthilarumuga5) April 2, 2022
அப்படி ஒரு விழாவில் ரஜினி கலந்து கொண்டது மட்டுமல்லாமல் மேடையில் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றுள்ள நான் ஆட்டோகாரன் என்ற பாடலுக்கு ரஜினி மேடையில் நடனம் ஆடியதை பார்த்து ரசிகர்கள் நம்ம தலைவரான ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.