அதிதி இளவரசி போல் உடையணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இளவரசி போல் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். பலரும் பொன்னியின் செல்வன் குந்தவை த்ரிஷாவிற்கே அதிதி டஃப் கொடுக்கின்றார் எனக் கூறி வருகின்றார்கள்.