Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம நமீதாவா இது….?” புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!!!

நமீதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.

பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில்  தான் காரணமாக இருக்கும் செய்தியை நமிதா அறிவித்தார். அண்மையில் இன்ஸ்டாவில் இரட்டைக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குழந்தை பிறந்திருப்பதை தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நமீதா. மேலும் அதற்கு நான் ஒரு நல்ல மம்மி என கேப்சன் கொடுத்திருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் நமீதாவா இது என ஷாக் ஆகி உள்ளார்கள். காரணம் என்னவென்றால், அந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து போய் இருக்கின்றார் நமீதா. மேலும் சோர்ந்து போன முகம் உறக்கம் இல்லாத இரவுகள் உங்கள் கண்களில் தெரிகின்றது எனவும் இந்த அழகான நினைவுகள் தான் தாயை அழகாக்கும் என ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள்.

https://www.instagram.com/p/CiIXGN9JuZd/?utm_source=ig_embed&ig_rid=e6d7f10a-79f9-4f65-815f-b6018fe54e6e

Categories

Tech |