Categories
மாநில செய்திகள்

நம்ம பள்ளி கல்வித்துறை அமைச்சர்… அவர் தொகுதி மக்களுக்கு செய்த நல்ல காரியத்தை பாருங்க…!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரின் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் மற்றும் துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் அழுத்த குறைபாடு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் மின் வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ட்ரான்ஸ்பாரம்களும், துவாக்குடி இமானுவேல் பகுதியில் 4.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ட்ரான்ஸ்பாரம்களும், எழில் நகரில் 3.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது.

இதனை தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தேனிர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உபயோகத்திற்கான ஆணையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மின்சாரத்துறை அதிகாரிகள், செயற்குழு உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |