பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎஃப் திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது அனிருத் இசை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுபோனது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளிலும் முன்பதிவு நன்றாக நடந்கிறது.
பீஸ்ட திரைப்படமானது வசூலை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து நாளை கேஜிஎப் திரைப்படம் இரண்டாம் பாகம் ரிலீசாக உள்ளது. இதனால் பீஸ்ட் திரைப்படத்திற்கு வசூல் பாதிக்கப்படும் என்கிறார்கள். பீஸ்ட் திரைப்படத்தை விட சென்னையில் கே ஜி எப்-2 திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் திரைப்படத்தை விட கேஜிஎப் படத்திற்கு அதிக காட்சிகள் கொடுத்திருக்கிறார்களே என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.