உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்த சாமி படத்தை வைத்து நாம் வணங்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
லட்சுமி தேவியின் எந்த ஒரு படத்தையும் நாம் வீட்டில் வைத்து வணங்கலாம். அதிலும் அலமேலுமங்கை தாயாருடன் வெங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. செய்யும் தொழிலும், வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும். ராமன், சீதை, லட்சுமணருடன் கூடிய அனுமர் படம் சிறந்தது. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை அளிப்பார் என்பது ஐதீகம். அனுமன் படம் வீட்டில் வைத்தால் கட்டாயம் ராமரின் படமும் வைக்கவேண்டும். லட்சுமி தேவியுடன் கூடிய நாராயணன் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம்.
மணக்கோலத்தில் இருக்கும் முருகனின் படத்தை வீட்டில் வைத்து நாம் வணங்கலாம். அவரவர் குல தெய்வங்களின் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. விநாயகர் படத்தை வீட்டில் வைத்து வணங்கும் போது நாம் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். அன்னபூரணியின் படத்தை வீட்டில் வைத்து நாம் வணங்கினால் பசி, பட்டினி தீரும், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படத்தை வைத்து வணங்கலாம். கலைமகளின் படமும் மிகவும் நல்லது. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கு பேச்சுத் திறனும் எழுத்துத் திறனையும் கொடுக்கும்.