கர்நாடகா, விஜயநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு இவர் ஹம்பி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கெமிலி அவரது குடும்பத்தினருடன் ஹம்பி வந்துள்ளனர். ஹம்பிக்கு சுற்றுலா வந்த பிலிப் குடும்பத்திற்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு உதவி செய்துள்ளார் . ஆனந்தராஜு குணத்தால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்களின் 3 வது மகள் இவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது பின்னாளில் காதலாக மாற, இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். 4 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் நேற்று இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.