நமது உடலை காப்பாற்ற போராடும் கல்லீரலை பற்றி சில நன்மைகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
மது அருந்தும் ஒருவனை அவனுடைய உடலுக்குள் இருக்கும் ஒரே ஒரு உறுப்பு மட்டும் காப்பாற்ற உன்னுடைய ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதை உழைப்பு என்று கூட அதை சொல்ல முடியாது போராட்டம் என்று சொல்லலாம். அப்படி போராடும் ஒரு உறுப்பு தான் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் உடலில் யார் என்று பார்த்தால் அது அவனுடைய கல்லீரல் மட்டுமே. கல்லீரல் கெட்டுப் போனால் உயிர் வாழ வழி இல்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் வேலை செய்யாத வேளையில் கூட கல்லீரல் வேலையை செய்கிறது.
உதாரணத்திற்காக மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் அந்த நேரத்தில் 800 வேலைகளை செய்து முடித்து விடுகிறது. நம்முடைய உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் முதல் தகவல் கல்லீரலுக்கு தான் செல்லும். நொடிப்பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்துக்கு ப்ரோத்ரோம்பின் என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கிறது. அந்த ரசாயனம் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலை போன்ற அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்கிறது. இதனால் இரத்த வெளியேற்றம் தடுக்கப்படும். இந்த வேலையை கல்லீரல் செய்யாமல் இருக்கும் என்றால் ஒரு சின்ன காயம் போதும் உயிர் போய்விடும். இன்றைக்கு லேசான தலைவலி, உடல் சோர்வு என்றால் கூட பலர் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். இவற்றில் நச்சுத் தன்மை நிறைந்து இருக்கிறது.
அந்த நச்சுத்தன்மை உடலில் சேராமல் தடுப்பதில் கல்லீரல்தான் போராடுகிறது. ஆல்ஹகாலில் ஏராளமான விஷத் தன்மை இருக்கிறது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்கும் இரவு முழுவதும் கல்லீரல் போராடிக்கொண்டிருக்கிறது. கல்லீரல் ஆல்ஹகாலுக்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பார்கள். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் மூச்சுக் கூட சரியாக விட முடியாது அப்புறம் எப்படி அவர்களால் ஸ்டெடியாக நிற்க முடியும். உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் மருந்து, மாத்திரைகள், விஷத்தை கூயோட செரிக்கக் கூடிய சக்தி படைத்தது கல்லீரல். கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லை என்றால் சாப்பிடும் உணவு செரிக்காது. இத்தகைய முக்கியமான உறுப்பை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.