Categories
தேசிய செய்திகள்

நம் தாய்க்கு நிகரான பசுக்கள்… அவற்றை கொல்லும் அரக்கர்கள்… மந்திரி சுதாகர் ஆவேசம்..!!!

பசுக்களை நம் தாயாக நினைத்து தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை பசுவுக்கும் கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பசுக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்வு பூர்வமானது. அதனை கொள்வதால் நமது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதுபற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பசுக்களை நம் குடும்பத்தின் உறவினர்கள் போன்று நினைத்து செயல்படுகிறோம். பசுக்களைக் கொல்வது இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. பசுக்களின் பால் குடித்து நாம் வாழ்கிறோம்.

பசுக்கள் நமது தாயுடன் ஒப்பிடுகிறோம். அதனால் நமது தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை நாம் பசுவுக்கும் கொடுக்க வேண்டும். ஆன்மீக உணர்வுகளுடன் யாரும் விளையாடக்கூடாது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில அரசின் விதிமுறைகளை பொது மக்கள் பின்பற்றி, தீபாவளி பண்டிகையை எளிமையாக கொண்டாட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |