Categories
சினிமா

நயனின் குழந்தைகள் ஆணா பெண்ணா?…. வெளியான PHOTO….. விக்னேஷ் சிவன் சொன்ன பதில்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர்.

அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் நாத்தனார் என குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகியது. இதனிடையே நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக நேற்று ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும்?ஒருவேளை வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டு உள்ளார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் புகைப்படம் மூலம் பதில் அளித்துள்ளார். அதாவது சிவன், பார்வதி இருவரும் விநாயகர் முருகனுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு “வெல்கம் டு மை உயிர் அண்ட் உலகம்” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். எனவே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |