நயன்தாராவின் திருமண நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் வந்ததால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள். மேலும் மலையாள நடிகரான தீலீப்பும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திலீப்பை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்து இருக்கின்றார்கள். பிரபல நடிகையின் பாலியல் தொல்லை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்து தற்போது சிக்கலில் இருக்கின்றார். இந்நிலையில் அவர் எதற்குநயனின் திருமணத்திற்கு வர வேண்டும் என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்.