நயன்தாராவின் திருமணத்தில் நெருங்கிய தோழியான சமந்தா கலந்து கொள்ளவில்லை.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.
ஆனால் நயன்தாராவின் நெருங்கிய தோழியான சமந்தா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதால் நயன்தாராவின் திருமணத்தில் சமந்தாவால் கலந்து கொள்ள முடியவில்லையாம். நயன்தாராவும் சமந்தாவும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தபோது நெருங்கிய தோழிகள் ஆகி விட்டார்களாம். ரசிகர்கள் கூறுவதாவது, என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என கூறுகின்றனர்.