நயனின் திருமணத்தில் போடப்பட்ட மெஹந்தி குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்த பிறகு நயனும் விக்கியும் கேரளா சென்றுள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி விழாவில் நயனுக்கு போடப்பட்ட மெஹந்தி குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நயனுக்கு மெஹந்தி போட்டுவிட்ட சரினா தனது அனுபவம் பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, மெஹந்தி போட வேண்டும் என ஆர்டர் வந்தது. நானும் யாருக்கு என கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன்.
பின் ஜூன் 8-ஆம் தேதி கால் வந்தது. அதில் இரண்டு மணி நேரத்தில் ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டலுக்கு வருமாறு கேட்டனர். இதையடுத்து நான் சென்ற போதுதான் நயன்தாராவுக்கு மெஹந்தி போட வேண்டும் என தெரிய வந்தது. அதை கேட்ட உடனே நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நயன்தாராவுக்கு போட்டுவிட்ட மெஹந்தி டிசைன் மண்டாலா. அதில் WN என எழுதுமாறு கூறினார்கள். நயன்தாராவுக்கு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனின் சகோதரிகள், அம்மா, சித்தி மேலும் நயன்தாராவின் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு மெஹந்தி போட்டு விட்டேன். மேலும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.