தனது மனைவி நயனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு நயனும் விக்கியும் திருப்பதி சென்றார்கள். பின் கேரளாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படமானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கி இருக்கின்றார். கோவையிலிருந்து கொச்சி செல்லும் பேருந்து எதிர்பாராதவிதமாக நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்கடியில் புதைந்து விடுகின்றது. அதில் உள்ள 11 நபர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதையாகும்.
Wishing the best for this awesome thriller #O2onHotstar 😇
Emotional & effective💐😇👍🏼
Congrats to you Thangamey ❤️☺️💐🥰 #Nayanthara ❤️☺️
Solid debut film from @GsViknesh & the young team, Needs all your encouragement for the sincere efforts @DreamWarriorpic kudos 💐👏👏 pic.twitter.com/t78UBdXABi
— VigneshShivan (@VigneshShivN) June 17, 2022
இந்த நிலையில் படத்திற்கும் தனது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, இந்த அற்புதமான திரைப்படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஏமோஷனல் அண்ட் எஃபெக்டிங், உனக்கு வாழ்த்துக்கள் தங்கமே என பதிவிட்டிருக்கிறார். மேலும் படக்குழு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.