Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனை திருமணம் செய்த விக்கியிடம் கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்”…. பாவம் எனக் கூறும் நெட்டிசன்ஸ்…!!!!

திருமணமான உடனே நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.

இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு நயனின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் நயனை எப்பொழுது திருமணம் செய்து கொள்வதில்லை என கேட்டு வந்த நிலையில் திருமணம் ஆன உடனே குட்டி நயன் எப்ப வருவார்கள் என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்த நெட்டிசன்ஸ் விக்னேஷ் சிவன் ரொம்ப பாவம் என கூறுகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |