நயன்தாரா ஆசி வழங்குவது போன்று ஜோ பைடன்க்கும், கமலா ஹாரிஸ்க்கும் ஆர் ஜே பாலாஜி வாழ்த்து தெரிவித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் அதிபராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ளனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ஜோ பைடன்க்கும் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ,பிரதமர் மோடி, காங்கிரஸ் தரப்பில் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி வித்தியாசமாக தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அதோடு நயன்தாரா மூக்குத்தி அம்மன் வேடத்தில் ஜோ பைடன்க்கும் , கமலா ஹாரிஷ்க்கும் ஆசி வழங்குவது போன்ற போஸ்டரையும் வடிவமைத்து அந்த பதிவில் வெளியிட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் மூக்குத்தி அம்மன் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
#MookuthiAmman துணையால் வெற்றிப் பெற்ற American president and Vice President ku வாழ்த்துக்கள்..! 🔥🔥🔥😃😃😃🙈🙈🙈 pic.twitter.com/bCwldOM8CZ
— RJ Balaji (@RJ_Balaji) November 8, 2020