நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார்.சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/DisneyPlusHS/status/1425366742931435520
இந்த படம் பிளைன்ட் என்ற கொரிய படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.