கடந்த 9ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக லிவிங் டுகெதர் இல் இருந்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9ஆம் தேதி முதல் முறைப்படி கணவன் மனைவி ஆகி இருக்கின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களும் கன்னாபின்னாவென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
ஒருவழியாக திருமணம் நடைபெற்று முடிந்து இருவரும் மறுவீடு என சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி பங்ஷனில் நயன்தாராவிற்கு போடப்பட்ட மெஹந்தி டிசைன் அதற்கு பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதன்படி நயன்தாராவிற்கு மெஹந்தி போட்டு விட்ட ஆர்டிஸ்ட் சரினா தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கின்றார். சரினாவிற்கு மெஹந்தி போட வேண்டும் என போனில் அழைப்பு வந்திருக்கிறது. அதற்கு சரினா யாருக்கு எங்கே என எதுவும் கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம்.
போனில் பேசியவர்கள் காத்திருங்கள் கன்பார்ம் செய்கின்றோம் என கூறி போனை வைத்து விட்டனர். அதன் பின் ஜூன் 8-ஆம் தேதி கால் செய்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டலுக்கு வர முடியுமா என கேட்டிருக்கின்றனர். இதனையடுத்து சரினாவும் அங்கு சென்று இருக்கின்றார். அப்போதுதான் நீங்கள் யாருக்கு மெஹந்தி போட போகிறீர்கள் என தெரியுமா என்று கேட்டிருக்கின்றனர். தனக்கு தெரியாது என கூறியிருக்கிறார். அதன்பின் அரங்கில் உள்ள சிலருக்கு மெஹந்தி போட்டு கொண்டிருந்தாராம். அப்போதுதான் நயன்தாரா மேடமுக்கு மெஹந்தி போட வேண்டும் எனக்கூறி கூட்டி சென்றார்கள்.
இதனால் ஆச்சரியத்தில் உறைந்து விட்டாராம் சரினா. நயன்தாராவிற்கு போட்ட மெஹந்தி டிசைனின் பெயர் மண்டாலாவாம். அந்த டிசைனுக்கு நடுவில் WN என்று எழுதுமாறு கூறினார்களாம். இருவரில் பெயரின் முதல் எழுத்து என்பதனால் அதனை எழுத வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். சரினா நயன்தாராவிற்கு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனின் அம்மா, அக்கா, தங்கை சித்தி மற்றும் நயன்தாராவின் உறவினர்கள் என சிலருக்கு மெஹந்தி போட்டு விட்டாராம். சரினா நயன்தாராவிற்கு மெஹந்தி போட வேண்டும் என்றதும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்ட தாக கூறிய சரினா விக்னேஷ் சிவனும் போட்டோ எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.