நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது? நடைபெறும் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ரசிகர் ஒருவர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன், செலவு அதிகமாகும் திருமணத்திற்கு பணம் சேர்த்து கொண்டிருக்கிறேன். கொரோனா முடிந்ததும் திருமணம் என்று தெரிவித்துள்ளார்.