Categories
சினிமா செய்திகள்

நயன்தாராவும் விக்கியும் சொன்ன குட் நியூஸ்..! என்ன தெரியுமா…???

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நற்செய்தியை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அவரின் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து இவர்களுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர். படங்களை தயாரிப்பதற்கு கதைகளை தேர்வு செய்வது நயன்தாராவின் பொறுப்பாகும். நயன் கதையை தேர்வு செய்யும் விதமே தனி அழகு என்கிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மல்ஹால் தாக்கர், மோனல் கஜ்ஜார் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சேர்ந்து தயாரிக்க உள்ளனர். இத்திரைப்படம் குஜராத்தி படமாகும். இத்திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் மனிஷ் ஷைனி இயக்குகின்றார். இத்திரைப்படத்தின் துவக்க விழாவின் போது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாக குஜராத் திரையுலகிற்கு சென்றுள்ள நற்செய்தியை கூறியிருக்கின்றார் விக்னேஷ் சிவன்.

Categories

Tech |