தன்னை பாராட்டிய விக்னேஷ் சிவனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி.
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். திருமணத்தின் போது நயன்தாரா அணிந்திருந்த ஆடையும் அணிகலன்களும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகை ஆர்த்தி அண்மையில் நயன்தாராவின் திருமண கோலத்தை போல மேக்கப் செய்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த போட்டோவிற்கு எதிர்பார்ப்பு நிஜம் என்றும் என்ன கொடுமை இது எனவும் கேப்ஷன் செய்திருந்தார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆர்த்தி என கமெண்ட் செய்திருந்தார். இதற்கு ஆர்த்தி மகிழ்ச்சியுடன் நன்றி என கூறி இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி விக்னேஷ் சிவன் பிரதர். தங்கள் கூறியது போல நானும் என்னை அழகியாகவே பார்க்கின்றேன். ஆனால் உண்மையில் தங்களின் பேரழகி மனைவி அவர்களைப் போல உடைய அலங்காரத்தை நான் செய்து கொண்டால் தான் இன்னும் மிளிர்கிறேன் என நம்புகிறேன் என குறிப்பிட்டிருக்கின்றார்.